முன்கூட்டியே 2 மாநிலங்களின் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜக! கர்நாடக தோல்வி காரணமா?
இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் திகதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜக
இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களின் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
அதாவது, சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள், மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கு 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் தோல்வி காரணமா?
இந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. அதனால், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தேர்தல் தோல்வியை சந்திக்க கூடாது என்பதற்காக முன்கூட்டியே பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதில், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யவில்லை.
In MP of the 39 candidates , five women, 8 SCs and 13 ST candidates https://t.co/3xtTxk7dNU
— Liz Mathew (@MathewLiz) August 17, 2023
மேலும், நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேர்தல் வியூகம் மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |