ஒரே நேரத்தில் 12 நகரங்களில் தாக்குதல் - இந்தியாவை குற்றஞ்சாட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 12 நகரங்களில் தாக்குதல்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் குவெட்டா, பாஸ்னி, மஸ்துங், நுஷ்கி மற்றும் குவாடர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 12 நகரங்களில் ஒரே நேரத்தில் பலுச் விடுதலைப் படையினர்(BLA) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்பு மூலம் நடைபெற்ற இந்த தாக்குதலில், இராணுவ நிறுவல்கள், காவல்துறை மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்ததாக BLA தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 ஆயுதம் ஏந்திய BLA குழுவினர் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சில பாதுகாப்பு அதிகாரிகள் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுடன் Operation Herof இரண்டாம் கட்டத்தை BLA அறிவித்துள்ளது.
இந்தியாவை குற்றஞ்சாட்டும் பாகிஸ்தான்
இந்த தாக்குதலினால் அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. பலுசிஸ்தான் மாநிலத்தில் அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்பு படையுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.

குவெட்டாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் உள்நாட்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை "ஃபிட்னா அல்-ஹிந்துஸ்தான்" நடத்தியதாக உள்துறை அமைச்சர் பாகிஸ்தான் மொஹ்சின் நக்வி கூறினார். பலுசிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் பிரிவினைவாத குழுக்களை ஃபிட்னா அல்-ஹிந்துஸ்தான் என குறிப்பிடுகிறார்.

தாக்குதல்களை முறியடித்ததற்காக பாதுகாப்புப் படைகளைப் பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பிரிவினைவாதிகளை இந்தியா ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து இந்தியா கருத்து தெரிவிக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |