மாயமந்திரங்கள் மீதான ஆசை... இளம்பெண்ணின் வீட்டுக்குள் பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி
ரஷ்யாவில், மாயமந்திரங்கள் மீதான ஈர்ப்பின் காரணமாக, ஆர்க்கிடெக்ட் பட்டப்படிப்பு முடித்த ஒரு பெண், தன் வேலையை விட்டுவிட்டு இறந்தவர்களுடன் பேசும் ஒரு கூட்டத்துடன் இணைந்துள்ளார்.
ஆர்க்கிடெக்டாக பணி புரிந்துவந்தவரான Elizaveta Tsarevskaya (32), ஒரு நல்ல உடை வடிவமைப்பாளரும்கூட.
ஆனால், எப்படியோ மாயமந்திரங்கள் செய்யும் ஒரு கூட்டத்தால் ஈர்க்கப்பட்டு வேலையை விட்டுவிட்டு இறந்தவர்களுடன் பேசும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
கணவனுக்குத் தெரியாமல் அந்த கூட்டத்தைச் சேர்ந்த Anton என்ற ஒருவரால் Elizaveta கர்ப்பமாக, அந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்த்துவந்திருக்கிறார் அவரது கணவரான Artur Rusin.
இந்நிலையில், ஒரு நாள் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்ட நிலையில், பொலிசார் வந்து வீட்டின் கதவை உடைத்துத் திறக்க, அங்கே அவர்கள் கண்ட காட்சி பொலிசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆம், அந்த வீட்டுக்குள் இரத்தக்கரை படிந்த பொருட்கள் நிறைந்து கிடக்க, Elizavetaவின் ஒரு வயது குழந்தை கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடக்க, அதன் மீதே நிர்வாணமாக விழுந்து கிடந்திருக்கிறார் Elizaveta. கூடவே கருப்புப் பூனை ஒன்று கொல்லப்பட்டுக் கிடந்திருக்கிறது.
அத்துடன் Elizavetaவின் முன்னாள் காதலன் ஒருவரின் புகைப்படம் ஒன்றும் அங்கிருந்திருக்கிறது. அந்த புகைப்படத்தின் மீது இரத்தம் பூசப்பட்டு, அதன் கண்கள் குத்திக் கிழிக்கப்பட்டிருந்திருக்கிறது.
ஆக, மாய மந்திரங்கள் தொடர்பான ஒரு சடங்குக்காக குழந்தையையும் பூனையையும் கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் Elizaveta. அவரது காதலன் Antonஐக் காணவில்லை.



 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        