நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருப்பு உளுந்து கறி: செய்வது எப்படி?
Tomato
Onion
Healthy Food Recipes
By Kirthiga
கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான ஊட்டச்சத்தும் கிடைத்து விடும்.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதால் இவர்களுக்கு ரத்த சோகை நோய் விரைவில் தீரும். கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைய உள்ளன. எனவே இதை தினசரி சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஆகவே கருப்பு உளுந்து கறி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து - 1 கப்
- நெய் - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- பிரியாணி இலை
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பட்டை - 4 துண்டு
- கிராம்பு - 4
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தக்காளி விழுது - 4
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
- சீரக தூள் - 1
- தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி
- தண்ணீர் - 1/2 கப்
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- சர்க்கரை - 1 தேக்கரண்டி
- கசூரி மேத்தி
- வெண்ணெய்
செய்முறை
-
முதலில் உளுத்தம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
-
பின் அதை பிரஷர் குக்கரில் சேர்த்து, பருப்பு முழுவதுமாக மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி இலை சேர்த்து 5-6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
-
அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம், பட்டை மற்றும் கிராம்பு வதக்கவும்.
-
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
-
அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
-
குக்கரில் இருந்து பிரியாணி இலையை அகற்றி தனியாக வைக்கவும். சமைத்த பருப்பை குழம்புடன் சேர்த்து கலக்கவும்.
-
குழம்பை தண்ணீர் சேர்த்து கரைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
-
இறுதியாக கரம் மசாலா தூள், சர்க்கரை, கசூரி மேத்தி சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான மற்ம் உடலுக்கு சக்தி தரக்கூடிய கருப்பு உளுந்து கறி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US