தாயைப் பிரிந்து தனிமையில் வாடிய கரடிக் குட்டிக்கு நேர்ந்த பரிதாபம்!
அமெரிக்காவில் உள்ள இடாஹோ பகுதியில் தாயைப் பிரிந்து வாடிய கரடிக் குட்டி, மயக்க மருந்து செலுத்தும்போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தனிமையில் சுற்றிய கரடிக்குட்டி
அமெரிக்காவின் இடாஹோ எனும் பகுதியில் உள்ள விக்டர் பாடசாலை அருகே கரடிக்குட்டி இருப்பதாகத் தகவல் கிடைத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது ஒரு வயதே நிரம்பிய கரடிக்குட்டி மரத்தின் மேலே ஏற முயன்று கொண்டிருந்திருக்கிறது.
@stockphoto
கடுமையான குளிர் காலத்தில் கரடிக்குட்டியின் தாய் உயிரிழந்திருக்கலாம் என்றும், அதனால் கரடிக்குட்டி உணவைத் தேடி வேறு வழியில்லாமல் இங்கு வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் அவ்வாறு வரும்போது அதிக பனிப்பொழிவு மற்றும் குளிரின் காரணமாக கரடி மிகவும் சிரமத்தைச் சந்திருக்கலாம் எனவும், சரியான உணவு கிடைக்காமல் அதன் உடல் எடை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இடாஹோவில் கருப்பு கரடிகள்
வட அமெரிக்காவில் மிகவும் பரவலான கரடி இனம் கருப்பு கரடி இனமாகும். இடாஹோவில் மட்டும் 300,000 நபர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 20,000 முதல் 30,000 கருப்பு கரடிகள் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த விலங்குகள் உணவின் வாசனையால் மனித குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. கரடிகள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டிகளைக் கலைத்து உணவைத் தேடுகின்றன, இல்லையென்றால் வீடுகளுக்குள் நுழைந்து சேட்டை செய்கின்றன.
மயக்க ஊசியால் உயிரிழந்த கரடிக்குட்டி
விக்டர் பாடசாலை அருகே இருந்த கரடிக்குட்டியை மீட்க வந்த வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். ஏற்கனவே உடல் மிகவும் பலவீனமாக இருந்ததாலும், சரியான உணவின்மையால் உடல் எடை குறைந்திருந்த கரடி, மயக்க ஊசியின் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
@Orphan Bear Cubs
பொதுவாக அமெரிக்காவின் நகரங்களில் கரடிகள் நுழைந்தால் அதிக அளவில் சேட்டைகள் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதால், உடனே அவற்றை அப்புறப்படுத்த வனத்துறையினர் எடுக்கும் முயற்சியில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை கூறியுள்ளது.
இதுபோல பூனைகள் மற்றும் கரடிக்குட்டிகள் மயக்க ஊசியின் தன்மையை ஒத்துக் கொள்ள முடியாமல் அடிக்கடி உயிரிழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.