பெரும்புள்ளிகளை வீடியோ எடுத்து மிரட்டி கோடீஸ்வரியான ஏழைப்பெண்! அரண்மனை வாழ்க்கை... பகீர் தகவல்கள்
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்த பெண்.
4 ஆண்டில் பல கோடிகளுக்கு அதிபதியான பகீர் பின்னணி
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெரும்புள்ளிகளை வளைத்து போட்டு அவர்களை மிரட்டி பல கோடிகளுக்கு அதிபதியான பெண் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.
ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஒரு பெண் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது ஆரம்பகாலத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்த அர்ச்சனா, பின்னர் பியூட்டி பார்லரில் சேர்ந்ததாகவும் அங்கு ஜெகபந்து சந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ததாகவும், பியூட்டி பார்லரில் வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்தார். இதனால் அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார்.
இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர் 18 எம்எல்ஏ.க்களை வளைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டி 4 ஆண்டில் ரூ.30 கோடிக்கு அதிபதியாகியிருக்கிறார். அதாவது 18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சனாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.