தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய புதுமணத் தம்பதி: ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்..தெரிய வந்த காரணம்
British newly couple helicopter crash: பிரித்தானிய புதுமணத் தம்பதி கிரீஸில் பலியான சம்பவத்தில் காரணம் தெரிய வந்துள்ளது.
கிரீஸிற்கு தேனிலவு சென்ற ஹெலிகொப்டரில் பிரித்தானிய தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விபத்து குறித்த காரணம் தெரிய வந்துள்ளது.
தேனிலவிற்காக கிரீஸ் நாட்டிற்கு
அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகிய பிரித்தானிய புதுமணத் தம்பதி, கடந்த வாரம் தேனிலவிற்காக கிரீஸ் நாட்டிற்கு சென்றனர்.
அவர் பயணித்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சிஃப்னோஸ் தீவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் மற்றும் கிரேக்க விமானியும் பலியாகினர்.
இந்த நிலையில், ஹெலிகொப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
மேலாண்மை ஆலோசனை நிறுவனம்
விமானி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. தற்போது அதற்கு காரணம் அதன் வால் ரோட்டார் செயலிழந்தது என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் விபத்திற்கு காரணம் சேதமடைந்த ரோட்டார் பிளேடாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எபர்ட் ஒரு மூத்த நிபுணராக பணியமர்த்தியிருந்த பெயின் அண்ட் கம்பெனி என்ற மேலாண்மை ஆலோசனை நிறுவனம், அவரைத் தனது லண்டன் குழுவில் 'மிகுந்த அன்புக்குரிய மற்றும் ஆழ்ந்த மரியாதைக்குரிய' உறுப்பினர் என்று விவரித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |