ஆப்கானிஸ்தான் மசூதியில் பயங்கர வெடிகுண்டு தாகுதல்!
ஆப்கானிஸ்தான் மசூதியில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nangarhar மாகாணத்தின் Spin Ghar மாவட்டத்தில் உள்ள மசூதியிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நாள் முதல் Nangarhar மாகாணத்தில் ஐ.எஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Spin Ghar மாகாணத்தில் உள்ள மசூதிக்குள் வெள்ளிக்கிழமை தொழுகையின் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நாள் முதல் அந்நாட்டில் நடத்தப்படும் தொடர் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நவம்பர் மாத தொடக்கத்தில் காபூலில் உள்ள தேசிய இராணுவ மருத்துவமனையில் ஆயுதங்களுடன் நுழைந்து ஐ.எஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
முன்னதாக இந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 120 கொல்லப்பட்டனர் என்பது குறிப்பித்தக்கது.