பாகிஸ்தான் மசூதியில் மிகப் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்
பாகிஸ்தானில் திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்குள் உள்ள மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டு உள்ள நிலையில், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
At least 17 people have reportedly been killed and dozens injured after a bomb blast at a busy mosque in Pakistan's Peshawar, say local officials ⤵️
— Al Jazeera English (@AJEnglish) January 30, 2023
?: https://t.co/R5q74scIjW pic.twitter.com/YWynAHGu00
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பெஷாவரில் வடமேற்கு நகரத்தில் பிற்பகல் தொழுகையின் போது இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு மீட்பு பணியாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் மசூதியின் மேற்கூரை மற்றும் பக்கச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து AFP நிருபர் வழங்கிய தகவலில், மீட்பு பணியாளர்கள் ஆம்புலன்ஸில் இரண்டு சடலங்களை எடுத்துச் சென்றதாகவும், இடிபாடுகளில் இருந்து பலர் ரத்தம் சொட்ட சொட்ட நொண்டியடித்து கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
AP
பெஷாவரில் உள்ள மருத்துவமனை செய்தி தொடர்பாளர் முஹம்மது அசிம் கான் வெளியிட்டுள்ள தகவலில், இது அவசர கால நிலை, இதுவரை தாக்குதலில் காயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ISIS தற்கொலை குண்டுதாரி பெஷாவரில் உள்ள சிறுபான்மை ஷியைட் மசூதியில் நடத்திய தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர்.
2018 நடத்தப்பட்ட பிறகு அதிக மக்கள் கொல்லப்பட்ட தாக்குதல் இதுவாகும்.