போலந்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: பிரதமர் எழுப்பிய சந்தேகம்
உக்ரைன் எல்லைக்கு செல்லும் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம், திட்டமிட்ட சதி வேலை என போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
உயிர் அபாயம்
குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பின்னால் யார் செயல்பட்டாலும், கைது செய்யபப்டுவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த பகுதியில் பார்வையிட்ட பிரதமர் டொனால்ட் டஸ்க், ரயில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட சேதம் திட்டமிட்ட செயல் என்றும், ரயிலை வெடிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்றும் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிர் அபாயம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்குப் பிறகு, போலந்தின் சிறப்பு சேவைகள் அமைச்சர் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு உளவு அமைப்புகளின் உத்தரவின் பேரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றார். ரஷ்யாவை நேரடியாகக் குறிப்பிடாமல், போலந்து சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான பெரிய தீ வைப்பு மற்றும் நாசவேலை தாக்குதல்களைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய பகுதி
தென்கிழக்கில் வார்சாவிற்கும் லப்ளினுக்கும் இடையிலான பாதையில் ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்தது. உக்ரைனுக்கான உதவிகள் வழங்குவதற்கு இந்தப் பாதை மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் டஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்தின் ரயில் சேவை அதன் அண்டை நாட்டிற்கான இராணுவ விநியோக பாதைகளில் ஒரு முக்கிய பகுதியாகும், அதே போல் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நகரும் பொதுமக்களுக்கான பாதையாகவும் உள்ளது. இதுபோன்ற தாக்குதல்களில் எந்தப் பங்கையும் ரஷ்யா எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |