காபூல் மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல்! வெளியான பரபரப்பு வீடியோ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இரண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூலில் உள்ள பெரிய இராணுவ மருத்துவமனையிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனை நுழைவு வாயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Qari Saeed Khosty தகவல் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்துவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தற்போது வரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால், இதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 34 பேர் காயமடைந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத தாலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவயிடத்தில் உள்ளவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்களில், அப்பகுதியில் புகை சூழ்ந்துள்ளதை காட்டுகிறது.
Afganistan'ın başkenti Kabil'de Serdar Davud Khan Hastanesi yakınında patlama meydana geldi.
— EHA MEDYA (@eha_medya) November 2, 2021
▪️Patlamalarda 19 kişinin hayatını kaybettiği, 43 kişinin de yaralandığı bildirildi. pic.twitter.com/2JlHf1Q3Jl
இத்தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், பல ஐ.எஸ் போராளிகள் மருத்துவமனைக்கு நுழைந்த பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக சாட்சியங்களை மேற்கோள்காட்டி ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பக்தர் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.