காபூல் பள்ளியை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு.. குழந்தைகள் பலியானதாக அச்சம்
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள ஆண்கள் பள்ளியில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூலின் மேற்கில் Dasht-e-Barchi-ல் அமைந்துள்ள பள்ளியிலே 3 குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காபூல் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் Khalid Zadran தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை காலை வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்டவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளி இருக்கும் பகுதி முழுவதையும் இஸ்லாமிய எமிரேட் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
Footage: Two explosions killed and wounded over 30 people mainly students at an educational center in two different parts of the Kabul, the capital of Afghanistan.#aamajnews pic.twitter.com/U9sAsV3to3
— Aamaj News (@aamajnews24) April 19, 2022
Dasht-e-Barchi, ஹசாரா சமூகத்தினர் வசித்த வரும் பகுதியாகும், முன்பு ஹசாரா சமூகத்தினர் ஐ.எஸ் அமைப்பால் குறிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.