நெருப்பு கோளமான இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்: மீட்புப் பணிகள் தீவிரம்

Russian Federation Turkey
By Arbin Nov 29, 2025 08:01 PM GMT
Report

துருக்கியின் பாஸ்பரஸ் ஜலசந்திக்கு அருகே கருங்கடலில் ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் திடீரென்று வெடித்து நெருப்பு கோளமான சம்பவம் வெளியாகியுள்ளது.

25 ஊழியர்கள்

துருக்கிய அதிகாரிகள் மற்றும் வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், கப்பலில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பு கோளமான இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்: மீட்புப் பணிகள் தீவிரம் | Blasts Hit Russia Tankers

எகிப்திலிருந்து ரஷ்யாவுக்குச் செல்லும் வழியில் கருங்கடலில் 274 மீற்றர் நீளமுள்ள கைரோஸ் என்ற எண்ணெய் கப்பல் வெடித்து தீப்பிடித்துள்ளது.

இதனையடுத்து இரண்டு விரைவு மீட்புப் படகுகள், ஒரு இழுவைப் படகு மற்றும் ஒரு அவசரகால மீட்புக் கப்பல் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக துருக்கியின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Airbus நிறுவனத்தின் திடீர் முடிவு... உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

Airbus நிறுவனத்தின் திடீர் முடிவு... உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

குறித்த கப்பலில் இருந்து 25 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, ​​துருக்கிய கடற்கரையிலிருந்து 28 கடல் மைல் தொலைவில் கைரோஸ் கப்பல் திடீரென்று ஏற்பட்ட தாக்கம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக துருக்கியின் கடல்சார் விவகார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நெருப்பு கோளமான இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்: மீட்புப் பணிகள் தீவிரம் | Blasts Hit Russia Tankers

இன்னொரு எண்ணெய் கப்பலான விராட், கருங்கடலில் சுமார் 35 கடல் மைல் தொலைவில் மோதியதாகக் கூறப்படுகிறது, மேலும் மீட்புப் படைகளும் ஒரு வணிகக் கப்பலும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக துருக்கியின் கடல்சார் விவகார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தடைகள் விதிக்கப்பட்ட

என்ஜின் அறையில் கடும் புகை இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அதில் இருந்த 20 பணியாளர்கள் நல்ல நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விபத்தில் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் தடைகள் விதிக்கப்பட்ட கப்பல் வரிசையை சேர்ந்தவையாகும்.

நெருப்பு கோளமான இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்: மீட்புப் பணிகள் தீவிரம் | Blasts Hit Russia Tankers

சமீபத்திய ஆண்டுகளில் கருங்கடலில் கப்பல்கள் கண்ணிவெடிகளைத் தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன, மேலும் சில கண்ணிவெடிகள் மிதந்து செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது கைரோஸ் கப்பல் காம்பியக் கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்தது. கப்பல் ஒரு கண்ணிவெடியில் மோதி மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, சம்பவத்தின் போது கப்பலில் எண்ணெய் எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US