கண் தெரியாதது போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர்! அம்பலமான இரட்டை வேடம்
இத்தாலியில் ஒருவர் கண் தெரியாதது போல் நடித்து பல மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இத்தாலியில் உள்ள Sicily பகுதியில் வசித்து வரும் ஒருவர் 2008ஆம் ஆண்டிலிருந்து தனக்கு கண் தெரியாது என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இது போல் பொய் கூறி சுமார் 13 வருடமாக ஏமாற்றி அரசாங்க ஆதரவை பெற்று வந்துள்ளார்.
இதுவரை இவர் சுமார் 262,000 வெள்ளியை நிதியுதவி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தபோது இத்தாலியின் காவல்துறை தகவல் பெற்றது.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படியில் அந்த நபர் மறைமுகமாக கண்காணிக்கப்பட்டுள்ளார். அவர் தனியாக வாகனம் ஓட்டுவது, கடைகளில் பொருள்களை பார்ப்பது, ஸ்கூட்டர் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் வாகனம் ஓட்டிக்கொண்டே தொலைபேசியை பயன்படுத்தியதை அதிகாரிகள் பார்த்தனர். அந்தவகையில் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் இத்தாலி பொலிஸ் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.