இங்கிலாந்தில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்: வீடொன்றில் பொலிசார் கண்ட காட்சி
இங்கிலாந்திலுள்ள வீடொன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்ட பொலிசார், அங்கு ஒரு கஞ்சா பண்ணையே இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
வீடொன்றில் பொலிசார் கண்ட காட்சி
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள அமைதியான தெரு ஒன்றில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பொதுமக்களில் ஒருவர் பொலிசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட வாரண்ட் பெற்ற பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
அந்த வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தபோது, அங்கு ஒரு பெரிய கஞ்சா பண்ணையே இருந்துள்ளது.
மின்சாரம் உட்பட சகல வசதிகளுடன் அமைந்திருந்த அந்த பண்ணையில், ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அந்த செடிகளை வளர்த்துவந்ததாக சந்தேகிக்கப்படும் தனது 20 வயதுகளிலிருக்கும் ஒரு இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |