வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டவருக்கு கிடைத்த கரன்சி நோட்டுக்கள்: கூடவே காத்திருந்த ஏமாற்றம்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல என்றொரு பழமொழி உண்டு...
அதேபோல, ஸ்பெயின் நாட்டில் வீடு ஒன்றைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கேன்களில் அடைக்கப்பட்டிருந்த கரன்சி நோட்டுக்கள் கிடைத்துள்ளன.
ஆனால், கூடவே அவருக்கு பெருத்த ஏமாற்றமும் கிடைத்தது.
வீடு வாங்கியவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி
ஸ்பெயின் நாட்டிலுள்ள Valencia என்ற இடத்தைச் சேர்ந்த Toño Piñeiro என்பவர், ஓய்வு பெற்றபின் வாழ்வதற்காக பழைய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, சுவருக்குள் ஆறு கேன்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார் அவர்.
அந்த கேன்களில் என்ன இருக்கிறது என்று பார்த்த Toño, அவற்றிற்குள் கரன்சி நோட்டுக்கள் இருப்பதைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்துள்ளார். சுமார் 47,000 பவுண்டுகள் மதிப்புடைய ஸ்பெயின் கரன்சி அந்த கேன்களுக்குள்ளிருந்து அவருக்குக் கிடைத்துள்ளது.
Image: AGENCIA ATLAS / EFE
கூடவே காத்திருந்த ஏமாற்றம்
சுமார் 40 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் கிடந்த அந்த பழைய வீட்டை வாங்கியிருந்த Toño, அந்த வீட்டில் பணம் கிடைத்ததும், அந்த பணத்தைக் கொண்டே வீட்டைப் புதுப்பித்துவிடலாம் என்று எண்ணியிருக்கிறார்.
ஆனால், அவர் அந்தப் பணம் குறித்து ஸ்பெயின் வங்கிக்குத் தகவல் தெரிவித்ததும், அவை மிகப்பழைய நோட்டுகள் என்றும், அவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டதாகவும் வங்கி தெரிவிக்கவே, கடும் ஏமாற்றமடைந்துள்ளார் Toño.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என அவர் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்போது, சில நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளவையாக இருப்பதை அறிந்து அவற்றை மாற்றியதில் அவருக்கு சுமார் 30,000 பவுண்டுகள் மதிப்புள்ள பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை வைத்து, தன் வீட்டின் கூரையைச் செப்பனிட்டுள்ளார் அவர்.
மேலும், மீதமுள்ள பணத்தை பழைய கரன்சிகளை சேகரிப்பவர்களிடம் விற்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Toño.
Image: AGENCIA ATLAS / EFE

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.