எந்த ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? ஆய்வில் தகவல்
எந்த ரத்த வகைகளை கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பதற்கான பதில் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை ரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், A, B மற்றும் Rh+ ரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று பரவல் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆய்வின் முடிவு வெளிவந்துள்ளது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
O, AB மற்றும் Rh- ஆகிய ரத்த பிரிவுகளை கொண்டவர்களுக்கு வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவு என்றும் தெரியவந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி முதல் அக்டோபர் 4ம் திகதி வரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.