80 பேரை கொன்று தின்ற முரட்டு முதலை: இப்போது என்ன ஆனது தெரியுமா?
உகாண்டாவின் விக்டோரியா ஏரியில் நீண்ட 14 ஆண்டுகள் ஒரு கிராம மக்களில் 80 பேர்களை கொன்று தின்ற முதலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உகாண்டாவின் விக்டோரியா ஏரியில் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த 75 வயது முதலைக்கு அப்பகுதி மக்கள் ஒசாமா பின்லேடன் என பெயர் வைத்திருந்தனர்.
சுமார் 16 அடி நீளம் கொண்ட இந்த கொடூர விலங்கு, 1991 மற்றும் 2005 க்கு இடையில் லுகங்கா என்ற சிறிய கிராமத்தின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு பேர்களை கொன்று தின்றுள்ளது.
சிறார்கள், மீனவர்கள் என பலரை அந்த முதலை கொன்று தின்றது. அந்த ஏரியில் அதன் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மீனவர்களின் படகு மீது குதித்து, அதில் இருப்பவர்களை தண்னீரில் விழ வைத்து, வேட்டையாடியது.
பலர் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பினாலும், சுமார் 80 பேர்கள் அந்த முதலைக்கு இரையாகியுள்ளனர். இந்த நிலையில், அந்த முதலையை அங்கிருந்து அப்புறப்படுத்த கிராம மக்கள் உதவி கோரினர்.
இதனையடுத்து 2005ல் உள்ளூர் மக்கள் 50 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து, வனவிலங்கு அதிகாரிகள் தரப்பும் அந்த முதலையை வலையில் சிக்கவைத்துள்ளனர்.
அந்த முதலையால் பாதிக்கப்பட்ட பலர், அதனை அப்போதே கொன்றுவிட வேண்டும் என்று முழக்கமிட்டனர். ஆனால் வனவிலங்குகளை தண்டிக்கக்கூடாது என சட்டமிருப்பதால், கிராம மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து உகாண்டாவின் முதலை பண்ணை ஒன்றில் ஒசாமா முதலை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இனப்பெருக்க நடவடிக்கைகளுக்கு ஒசாமா முதலை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.