நீல நிறத்தில் ஒளிரும் கடல்: எதனால் நிகழ்கிறது?
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் காணப்படும் கடலானது நீல நிறத்தில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஒரு வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நீல நிறத்தில் மாறிய கடல்
டயனோப்ளாஜலேட்ஸ் என்ற பாசி காரணமாக கடல் நீல நிறமாக மாறியிருக்கின்றது. அதாவது, சிறுமீன்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் அந்தப் பாசி, நீலநிற வண்ணத்தை வெளியிடுகிறது. அப்போது ஒளி வெள்ளத்தில், பெரிய மீன்கள் சிறிய மீன்களை தின்றுவிடும். இதனால் இது ஏற்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் கடலில் சேர்ந்த கழிவுகளில் இருந்து நைட்ரஜன் கலந்த பொருட்களில் இருந்து இந்த ஒளி வெளியாகியிருக்கலாம் என கடலோர ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தகவல் பரவியதும் பலரும் ஒளிரும் கடலை காண கடற்கரைக்கு படையெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |