நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளி ராக்கெட்: வெடித்து சிதறியதாக நாசா அறிவிப்பு
நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளி ராக்கெட் அமைப்பு எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்து சிதறிய விண்வெளி ராக்கெட்
அமெரிக்காவின் புளோரிடாவில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி மையத்தில், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ராக்கெட் திடீரென வெடித்து சிதறியது.
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜன் நிறுவனத்திற்கு சொந்தமான நியூ கிளென் ராக்கெட் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதாக நாசா அறிவித்துள்ளது.
Blue Origin's New Glenn just blew up at LC-36 while attempting to Static Fire ahead of NG-4.https://t.co/tANS0dWyIH pic.twitter.com/PztxFoBqIw
— NSF - NASASpaceflight.com (@NASASpaceflight) May 29, 2026
கிட்டத்தட்ட 98 மீட்டர் நீளம் கொண்ட இந்த ராக்கெட் ஜூன் 4ம் திகதி அமேசானின் லியோ பிராட்பேண்ட் நெட்வொர்க்கிற்கு சொந்தமான 78 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்த தயாராக இருந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக நியூ கிளென் ராக்கெட்டில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக வலைதள பதிவில், ராக்கெட் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவாக சீரமைத்து மீண்டும் விண்வெளி பயணத்தை தொடங்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

நியூ கிளென் ராக்கெட் ஏவுவதற்காக உலகில் கட்டப்பட்ட ஒரே ஏவுதளம் LC 36 ஏவுதளம் ஆகும், ராக்கெட் வெடிப்பு காரணமாக சேதமடைந்து இருப்பதால், அவற்றை சரி செய்யும் வரை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தங்கள் விண்வெளி பயணத்திற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமாக பார்க்கப்படும் லியோ நெட்வொர்க்கிற்கும் இந்த விபத்து பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |