புதிய மைல்கல்லை எட்டிய BMW India - 5000 EV கார்கள் டெலிவரி
BMW India தனது மின்சார வாகன (EV) வளர்ச்சியில் முக்கியமான சாதனையை எட்டியுள்ளது.
நிறுவனம் இதுவரை 5000 மின்சார கார்களை இந்தியாவில் விநியோகித்துள்ளது.
இதனை முன்னிட்டு BMW வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியா வரை 4,000 கிலோமீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலைகளில் High-Power charging corridor-ஐ தொடங்கியுள்ளது.
இது டெல்லி, ஜெய்ப்பூர், அஹமதாபாத், மும்பை, புனே, ஹூப்ளி, பெங்களூரு, கோவை மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.
இந்த சார்ஜிங் நிலையங்கள் 300 கி.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. அவை 120kW முதல் 720kW வரை சக்தி கொண்டவை.
அனைத்து பிராண்டுகளின் EV பயனாளர்களுக்கு இந்த நிலையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது இந்தியாவின் EV வாகனங்களின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BMW India EV deliveries, BMW 5000 electric cars India, BMW 4000 km charging corridor, BMW EV charging network India, BMW electric cars, EV infrastructure India 2025, Luxury electric vehicles India