100 பேருடன் காங்கோ நோக்கி சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 41 பயணிகள் உயிரிழப்பு
A boat capsized as it headed to Congo 41 dead: காங்கோவிற்கு சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகு கவிழ்ந்து விபத்து
டங்கனியா ஏரி வழியாக டான்சானியாவில் இருந்து காங்கோவின் கலெமி நகருக்கு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது இந்த படகில் 100 பயணிகளும், ஏராளமான சரக்குகளும் இருந்ததாக டங்கனியா போக்குவரத்து அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத நேரத்தில் படகு கவிழ்ந்ததை அடுத்து, குறைந்தது 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 49 பேர் மீட்கப்பட்டு இருப்பதாகவும், காணாமல் போன மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி தெரிவித்துள்ளார்.
இந்த படகு விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
டங்கனிகா ஏரி உலகின் மிகப்பெரிய நன்னீர் எரி மற்றும் பைக்கால் எரிக்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிக ஆழமான ஏரியாகவும் உள்ளது.