கடலில் கவிழ்ந்த சிறிய படகு: 5 பேர் உயிர் குடித்த சம்பவம்: சட்டவிரோத நுழைவு முயற்சி
சான் டியாகோவில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படகு கவிழ்ந்து 4 பேர் பலி
சாண் டியாகோ-வுக்கு அருகில் உள்ள இம்பீரியல் கடற்கடையில் சிறிய ரக படகு கவிழ்ந்த சம்பவத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சீகோஸ்ட் டிரைவில(seacoast drive) படகு கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது, இந்த சம்பவத்தில் 5 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகு “பங்கா” என்ற வகையை சேர்ந்தது என்றும், இது அமெரிக்காவிற்குள் ஆவணங்கள் இல்லாமல் நுழைய முயலும் குடியேறிகளின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் கடலோர காவல்படை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |