வாழ்வாதாரத்தை தேடி பயணித்த புலம்பெயர்ந்தோர்: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு..74 பேர் மாயமானதால் அச்சம்
மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்துக்குள்ளானதில், இறந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத பயணம்
எத்தியோப்பியாவில் இருந்து 154 பேர் படகு மூலம் சட்டவிரோதமாக பயணித்தபோது, மோசமான வானிலையால் கடலில் மூழ்கி 54 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தேடும் பணி துரிதகதியில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு சம்பவங்கள்
ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பயணிக்கின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்களின்போது விபத்துகள் நேர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |