படகில் சமைத்ததால் தீப்பிடித்து 50 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் மாயம்..ஆப்பிரிக்க நாடொன்றில் சோகம்
காங்கோ நாட்டில் படகு ஒன்று தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
காங்கோ
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள மடன்குமு துறைமுக பகுதியில் இருந்து மோட்டார் படகு ஒன்று புறப்பட்டது.
சுமார் 400 பேர் பயணித்த அந்த படகு போலோம்பா நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது குறித்த படகு பன்டாக்கா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி விபத்திற்குள்ளானது.
இதனால் பயத்தில் அலறிய பயணிகள், உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து ஆற்றில் குதித்தனர். மேலும் படகும் ஆற்றில் கவிழ்ந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேடும் பணியில் மீட்புப் படையினர்
சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல்போன இதர பயணிகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் பெண்ணொருவர் படகில் சமைத்ததே தீப்பற்றி பரவ காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |