கும்பமேளாவால் தினமும் ரூ.50000-க்கும் மேல் வருமானம்.., லட்சாதிபதியான படகோட்டிகள்
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா மூலம் தினமும் ரூ.50000-க்கும் மேல் வருமானத்தை படகோட்டிகள் பெற்றுள்ளனர்.
வருமானம்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் திகதி நிறைவடைந்தது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் சில அசம்பாவிதங்கள் நடந்திருந்தாலும் கும்பமேளா சிறப்பாக நடைபெற்றதாக உத்திரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்தன.
அப்போது பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற பிரயாக்ராஜில் ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை.
இந்த நிகழ்வுக்கு ரூ.7,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில், ரூ. 3 லட்சம் கோடி வணிகத்தில் சாதனை படைத்துள்ளது. இந்த தாக்கமானது இந்தியாவின் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
மேலும், கும்பமேளாவில் படகு ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர், "படகு ஓட்டுநர் ஒருவரின் கதையை உங்களுக்கு சொல்கிறேன்.
அவரிடம் மொத்தம் 130 படகுகள் உள்ளன. கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் அவர்கள் ரூ. 30 கோடி லாபம் ஈட்டியுள்ளனர்.
ஒவ்வொரு படகிலிருந்தும் தினசரி ரூ.50,000 முதல் ரூ.52,000 சம்பாதித்து ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் சம்பாதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |