சதுரங்கத்தில் 38 வருட சாதனையை முறியடித்த பிரித்தானிய தமிழ் சிறுமி போதனா
uk tamil Bodhana Sivanandan becomes youngest female international master: பிரித்தானிய தமிழ் சிறுமி போதனா சிவானந்தன், மிக இளம் வயது பெண் சர்வதேச மாஸ்டர் என்ற பட்டதை பெற்று 38 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
இளம் வயது பெண் சர்வதேச மாஸ்டரான போதனா
தமிழ்நாட்டின் திருச்சியை பூர்விகமாக கொண்ட போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

11 வயதான இவர், உலகின் இளம் வயது WGM, பிரித்தானியாவின் மிக இளம் வயது மகளிர் சதுரங்க சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஏற்கனவே படைத்துள்ளார்.
தற்போது, 11 வயதில் மிக இளம் வயது பெண் சர்வதேச மாஸ்டர் (IM) என்ற மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார்.
மாண்டினீக்ரோவின் புத்வாவில் நடைபெற்ற ஐரோப்பிய கிளப் கோப்பையில், சதுரங்க ஜாம்பவான் ஜூடிட் போல்கர் 38 ஆண்டுகளாகத் தக்கவைத்து வந்த சாதனையை போதனா சிவானந்தன் முறியடித்துள்ளார்.
11 வயது மற்றும் 7 மாதங்களில், 1988 ஆம் ஆண்டில் இதே மைல்கல்லை எட்டிய போல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
IM பட்டத்திற்குத் தகுதிபெற, வீரர்கள் பொதுவாக 'நார்ம்ஸ்' எனப்படும் 3 போட்டித் தொடர் செயல்திறன்களையும், குறைந்தபட்சம் 2400 ஃபிடே மதிப்பீட்டையும் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பட்டம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் திறந்திருக்கும். மேலும் இது சதுரங்கத்தின் மிக உயர்ந்த பட்டமான கிராண்ட்மாஸ்டருக்கு அடுத்த நிலையில் உள்ளது.
போதனாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம், "2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஐரோப்பிய மகளிர் செஸ் கிளப் கோப்பையின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற 11 வயது போதனா சிவானந்தனுக்கு வாழ்த்துகள் !
Congratulations to 11-year-old Bodhana Sivanandan 🏴 on becoming an International Master with a final-round win at the European Women’s Chess Club Cup 2026! 👏 Bodhana delivered a fantastic performance, scoring 5.5/7 on Board 1 for She Plays to Win Lionesses 🏴, making her the youngest female player in history to earn the IM title!
— European Chess Union (@ECUonline) October 23, 2026
போதனா தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் பலகையில் 'She Plays to Win Lionesses' என்ற காய்களுடன் 7-க்கு 5.5 புள்ளிகள் பெற்று , சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்ற வரலாற்றிலேயே மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்" என தெரிவித்துள்ளது.