பாதி எரிந்த நிலையில் நான்கு உடல்கள்... பாலைவனத்தில் பகீர் சம்பவம்: அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள மொஜாவே பாலைவனத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட 6 சடலங்கள் தொடர்பில் தற்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாலைவனத்தில் 6 சடலங்கள்
பொதுமக்கள் சிலரிடம் இருந்து 911 இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சம்பவயிடத்திற்கு பொலிஸ் ஹெலிகொப்டர் விரைந்துள்ளது. இந்த நிலையிலேயே மொஜாவே பாலைவனத்தில் 6 சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
@cbs
இதனிடையே திங்களன்று சான் பெர்னார்டினோ ஷெரிப் அலுவலகம் தெரிவிக்கையில், இந்த சம்பவம் சட்டவிரோத கஞ்சா உற்பத்தி தொடர்பானதாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 6 உடல்களில் நால்வர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 23ம் திகதி எல் மிராஜ் நகரத்தின் பிரதான சாலை அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆறு பேர்களும் துப்பாக்கி குண்டுக்கு பலியானதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
அத்துடன் நால்வரின் உடல் பாதி எரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது. இதனிடையே, துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
வரி விதிக்கப்படாத கஞ்சா
நால்வரின் சடலம் ஒரே இடத்திலும், ஒருவரது சடலம் வாகனத்திலும், ஆறாவது நபரின் சடலம் இன்னொரு பகுதியிலும் காணப்பட்டுள்ளது. இதுவரையான விசாரணையில், சட்டவிரோத கஞ்சா கடத்தல் தொடர்பில் கொலை நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ap
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐவர் தற்போது கைதாகியுள்ளதாகவும், 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் 2016 முதல் பெரியவர்கள் கஞ்சா வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் சட்டப்பூர்வ அனுமதி உள்ளது, ஆனால் வரி விதிக்கப்படாத கஞ்சாவுக்கு தற்போதும் மக்கள் ஆதரவு உள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 411 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 34,000 கிலோ அளவுக்கு சட்டவிரோத கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |