புகலிடக் கோரிகையாளர் தடுப்பு முகாமில் படுகாயங்களுடன் சடலம்! விசாரணை முன்னெடுப்பு
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிகையாளர் தடுப்பு முகாமில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது விசாரணையை தூண்டியுள்ளது.
புகலிடக் கோரிகையாளர் தடுப்பு முகாம்
சிட்னியின் தென்மேற்கில் உள்ள வில்லாவுட் என்ற புகலிடக் கோரிகையாளர் தடுப்பு முகாமில், 51 வயது மதிக்கத்தக்க ஆண் அவரது அறையில் இறந்த நிலையில் இருந்ததாக தெரிய வந்தது.
AAPIMAGE
கடுமையான காயங்களுடன் காணப்பட்ட அவரது நிலை குறித்து உடனடியாக அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையும் இந்த விசாரணைக்கு உதவி வருகிறது.
விசாரணை
விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவோ அல்லது அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவோ இல்லை என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "குற்றம் நடந்த இடம் சீல் வைக்கப்பட்டு, மாநில குற்றப் பிரிவின் கொலைக் குற்றப் புலனாய்வுக் குழுவின் உதவியுடன் இந்தச் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
Supplied: ASRC
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |