மர்மமான முறையில் மாயமான 19 வயது பெண்: வீட்டருகே தாயார் கண்ட அதிர்ச்சி காட்சி
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இளம்பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது வீட்டின் அருகே சடலம் ஒன்று கிடைத்தது கவலைகளைத் தூண்டியுள்ளது.
புல்வெளிப் பகுதியில் சடலம்
டெக்ஸாஸ் மாகாணம் சான் ஆன்டோனியாவைச் சேர்ந்த இளம்பெண் கமிலா மெண்டோசா (19). இவர் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று நடைப்பயிற்சிக்கு சென்றபோது மர்மமான முறையில் மாயமானார்.
அதனைத் தொடர்ந்து, அவரது தாயார் ரொசாரியோ அளித்த புகாரின் பேரில் கமிலாவைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு புல்வெளிப் பகுதியில் கமிலாவைப் போன்ற சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகிலேயே 9mm லூகர் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
கமிலா காணாமல்போன சிறிது நேரத்திலேயே, அதே வகை துப்பாக்கி ஒன்று தங்கள் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அப்பெண்ணின் சகோதரர் கார்லோஸ் தெரிவித்திருந்தார்.
காணாமல்போன கமிலா
இதற்கிடையில், கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல்போன கமிலாவா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் இன்னும் டிஎன்ஏ பரிசோதனைகளை நடத்தவில்லை என்றாலும், அந்த சடலம் அவருடைய அடையாளங்களுடன் பொருந்துவதாக ஷெரிப் அலுவலக வட்டாரம் ஊடகத்திடம் கூறியுள்ளது.
மேலும், கமிலாவின் தாயார் ரொசாரியோ இந்த செய்தியால் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாகவும், 'வீட்டிற்கு மிக அருகில்' என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறார் என்றும், பெண்ணைத் தேடும் முயற்சிகளுக்கு தலைமை தாங்க உதவிய ஓய்வுபெற்ற காப்பீட்டு விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இளம்பெண் (கிடைத்த சடலம்) எப்படி இறந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; வரும் நாட்களில் மருத்துவப் பரிசோதகர் பதில்களை வழங்குவார் என்று நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |