பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி
வேல்ஸில் மாயமான 28 வயது நபரை தேடும் பணியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மாயமான நபர்
பிரண்டன் பார்ஃபிட் (28) என்ற ஞாயிற்றுக்கிழமை மாலை மாயமானார். அவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது.
அவரது சகோதரர் டிரிஸ்டன் மற்றும் அவர்களது மற்ற உடன்பிறப்புகள் 'தனது பிறந்த மகனுக்காக' அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என சமூக ஊடகங்களில் எழுதினர்.
மேலும் பார்ஃபிட்டின் சகோதரர் டிரிஸ்டன் பேசியபோது, "நான் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு பிரண்டனுடன் பேசினேன். அப்போதிலிருந்து குடும்பத்தினரும், நண்பர்களும் Ebbw Vale, ட்ரெடேகர் மற்றும் பிரைன்மாவர் பகுதிகளில் தேடி வருகின்றனர். காவல்துறையினர் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை நிறுத்தியுள்ளனர். ஆனால் வீதிகளில் அவர்களின் இருப்பு இல்லை" என குற்றம்சாட்டியிருந்தார்.
சடலம்
இந்த நிலையில், பார்ஃபிட்டை தேடும் பணியில் Ebbw Valeயில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதன் முறையான அடையாளம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் Gwent காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |