பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் இறந்த உடல்: பொலிஸார் விசாரணை தீவிரம்
நார்தம்ப்டனில் உயிரிழந்து கிடந்த 36 வயது மதிக்கத்தக்க இளம்பெண்.
விசாரணை நடைபெற்று வருவதால், இந்த நேரத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொலிஸார் அறிவிப்பு.
பிரித்தானியாவின் நார்தம்ப்டனில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பிரித்தானியாவின் நார்தம்ப்டன் பகுதியில் உள்ள சொத்து ஒன்றிக்கு காவல்துறை வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவரின் உயிரிழந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பிறகு உடல் கைப்பற்றப்பட்ட லோயர் மவுண்ட்ஸில் உள்ள லாரன்ஸ் கோர்ட்டில் உள்ள முகவரிக்கு வருகை தந்த காவல்துறை அதிகாரிகள் தற்போது கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
sky news
சிறப்பு தேடல் குழுக்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்தில் இருக்கும் நிலையில், கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடல் சனிக்கிழமை பிற்பகல் அந்த சொத்தில் இருந்து அகற்றப்பட்டது.
உள்துறை அலுவலக நோயியல் நிபுணர் நாளை லீசெஸ்டர் ராயல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உள்ளார்.
இது தொடர்பாக நார்தம்ப்டன்ஷையர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்தில், விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த நேரத்தில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய கடல் படுகையில் ரஷ்ய கண்ணிவெடிகள்: தீவிர ஆய்வுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல்
மேலும் பொலிஸாருக்கு உதவக்கூடிய விசாரணை தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், அக்டோபர் 7, வெள்ளிக்கிழமை, 211 சம்பவத்தை மேற்கோள் காட்டி, 101 என்ற எண்ணில் நார்தம்ப்டன்ஷையர் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.