பாலிவுட் நடிகை கடும் சர்ச்சைக்குரிய டுவீட்: அதிரடியாக டுவீட்களை நீக்கிய நிறுவனம்
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாப் உலகின் இளவரசி மற்றும் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா ஆதரவு தெரிவித்து இதுக்குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் ரிஹானா டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இப்பதிவை பார்த்த கங்கனா ரணாவத் ‘‘டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீனக் காலனியாக மாற்ற முடியும். முட்டாள்... நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’’ என தனது டுவிட்டர் பக்கத்தில் ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இப்பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கங்கனா ரணாவத்துக்கு, சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது மிகப்பெரிய அளவில் பேசும்பொருளாக மாறியதால் கங்கனா ரணாவத்தின் சர்சைக்குரிய டுவீட்களை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.