இந்தி மொழியில் பேச மறுப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை கஜோல்.., கோபமடைந்த வீடியோ வைரல்
பாலிவுட் நடிகை கஜோல் இந்தி மொழியில் பேச மறுப்பு தெரிவித்து கோபமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோபமான நடிகை கஜோல்
சமீப காலமாகவே இந்தி மொழி குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக சில நடிகர், நடிகைகள் இந்திக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் பிரகாஷ் ராஜ் வரிசையில் தற்போது பாலிவுட் நடிகை கஜோலும் இணைந்துள்ளார். இவர், செய்தியாளர்களிடம் இந்தி மொழியில் பேச மறுப்பு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவருக்கு கலைத்துறையில் செய்த செயல் மற்றும் இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது தான் சர்ச்சைக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் செய்தியாளர் ஒருவர் இவரிடம் இந்தி மொழியில் பேசுங்கள் என்று கூறிய போது அதற்கு கோபமடைந்த கஜோல், "நான் இப்போது இந்தியில் பேச வேண்டுமா? நான் பேசுவதை யார் புரிந்து கொள்ள விரும்புகிறாரோ, அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்று பேசினார்.
இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
हिंदी से ही इनको रोज़गार मिलता है,हिंदी से ही प्रसिद्धि मिली है,हिंदी का ही खाते हैं…और हिंदी में एक लाइन बोलने को कहा गया तो यह प्रतिक्रिया? इन लोगों की असलियत यही है#Kajol #Hindi #HindiVsMarathi
— Shilpi Sen (@senshilpi) August 7, 2025
pic.twitter.com/nJTutoJONM
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |