தொழிலாளியின் மகன்.., 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது IPS அதிகாரி
ஒரு தொழிலாளியின் மகன் ஒருவர் 22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது IPS அதிகாரியாக மாறியுள்ளார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான குஜராதில் ஜூலை 1995 -ம் ஆண்டில் பிறந்தவர் சஃபின் ஹசன் (Safin Hasan). இவர் தனது பள்ளி படிப்பை பலன்பூரில் உள்ள எஸ்கேஎம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
இவருக்கு யுபிஎஸ்சியில் சேர ஆசை வந்தது எப்போது என்றால் இவரது பள்ளிக்கு ஆட்சியர் வந்த போது தான். அப்போது ஆட்சியர் இவரை பாராட்டியதால் சஃபின் ஹசன் சந்தோஷம் அடைந்தார்.
இவருக்கு யுபிஎஸ்சி படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் இவரது பெற்றோர் நிதி நெருக்கடி காரணமாக ஒரு வைரப் பிரிவு சம்மந்தமான வேலையில் இருந்தனர். அந்த வேலையையும் கடந்த 2000-ம் ஆண்டில் இழந்தனர்.
இவரது தாய் மற்ற வீடுகளில் சமையல் வேலையையும், இவரது தந்தை செங்கற்கள் சுமக்கும் வேலையையும் செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல், வறுமையின் காரணமாக மாலை நேரத்தில் அவித்த முட்டை கடையையும் வைத்தனர்.
முக்கியமாக சஃபின் ஹசனின் பள்ளியே அவருக்கு உறுதுணையாக இருந்தது. அதாவது, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கட்டணத்தை பள்ளியே தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவர் தனது கல்லூரி படிப்பிற்காக பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தார். இதற்கான கட்டணத்தை அவரது உறவினர்கள் கொடுத்தனர்.
பின்னர், 2017-ம் ஆண்டில் சஃபின் ஹசன் யுபிஎஸ்சி தேர்வு எழுத சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்தாலும் தேர்வெழுத சென்றார்.
அதன்பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைகள் மற்றும் பிசியோதெரபி செய்யப்பட்டன.
இறுதியில் அவரது கடின உழைப்பின் பலனாக யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்து AIR 570 இடத்தை பிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |