நன்றியுணர்வு.., 23,000 ஊழியர்களுக்கு 500 கோடி மதிப்பில் பங்குகளை ஒதுக்கும் மஹிந்திரா நிறுவனம்
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய 23,000 ஊழியர்களுக்கு 500 கோடி மதிப்பில் பங்குகளை ஒதுக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
மஹிந்திரா அறிவிப்பு
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் சிஇஓ அனிஷ் ஷா, 23,000 ஊழியர்களுக்கு 500 கோடி மதிப்பில் பங்குகளை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பாக கூறுகையில், "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை (Employee Stock Ownership Plan) அறிவிக்கவுள்ளோம்.
ஆலை தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களும் இந்த திட்டத்தில் பயன் அடைவார்கள். இதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முயற்சியானது மஹிந்திராவின் மூன்று முக்கிய துணை நிறுவனங்களை உள்ளடக்கியது ஆகும். அதாவது, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் மற்றும் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி ஆகியவை ஆகும்.
இந்த திட்டமானது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்களுக்கு நன்றியுணர்வின் அடையாளமாக தொடங்கப்பட்டது.
இதன்படி, மொத்தம் 23,000 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.400 முதல் 500 கோடி மதிப்பில் பங்குகள் ஒதுக்கப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |