இத்தாலியின் சாய்ந்த கோபுரம் மொத்தமாக சரிந்து விழலாம்: அச்சத்தில் நிபுணர்கள்
இத்தாலியின் போலோக்னா நகரத்தில் அமைந்துள்ள 12ம் நூற்றாண்டு சாய்ந்த கோபுரமானது மொத்தமாக சரிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 மீற்றர் உயரம் கொண்ட சுவர்
குறித்த கோபுரத்தை தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த கோபுரமானது சரிந்து விழும் அபாயமிருப்பதால், அதனைச் சுற்றி 5 மீற்றர் உயரம் கொண்ட சுவர் ஒன்றை எழுப்பும் பணிகளை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
@getty
குறித்த கோபுரம் சரிந்தால், அதன் இடிந்த பகுதிகள் இந்த சுவற்றுக்குள் தங்கும் என நம்புகின்றனர். 154 அடி கொண்ட அந்த கோபுரமானது நான்கு டிகிரி கோணத்தில் சாய்கிறது எனவும், ஆய்வில் அந்த கோபுரம் சாய்வின் திசையில் மேலும் சாய்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்று நகர சபை நிர்வாகம் கூறியுள்ளது. போலோக்னா நகரின் அடையாளமாக ஆதிக்கம் செலுத்தும் இரண்டு கோபுரங்களில் கரிசெண்டா கோபுரம் ஒன்று.
இன்னொரு கோபுரம் Asinelli. இது தற்போதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கரிசெண்டா கோபுரமானது 1109 முதல் 1119 வரை கட்டுமானத்தில் இருந்துள்ளது.
உலோக வலைகளும் நிறுவப்படும்
ஆனால் 14ம் நூற்றாண்டில், குறித்த கோபுரம் சாய்வதாக கண்டறியப்பட்ட நிலையில், அதன் உயரத்தை குறைத்துள்ளனர். அக்டோபர் மாதம் கரிசெண்டா கோபுரம் மேலும் சாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
@getty
தற்போது அந்த கோபுரத்தை சுற்றி சுவர் ஒன்று எழுப்புவதுடன், அடுத்த ஆண்டு துவக்கத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த கோபுரமும் அதன் அடித்தளத்தில் அமைந்துள்ள பிளாசாவும் மூடுப்பட்டிருக்கும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோபுரத்தைச் சுற்றி உலோக வலைகளும் நிறுவப்படும் என தெரிவித்துள்ளனர். கோபுரத்தில் சுற்று சுவர் எழுப்ப மட்டும் 4.3 மில்லியன் யூரோ செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மறுசீரமைப்புக்கு நிதி திரட்ட பொதுமக்களிடம் இருந்து உதவி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1321ல் வெளியான The Divine Comedy என்ற Dante எழுதிய உலகப்புகழ்பெற்ற கவிதையில் கரிசெண்டா கோபுரம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |