பிரேசிலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம்: மியாமியில் தரையிறங்கிய ஃபிளாவியோ போல்சோனாரோ
Flávio Bolsonaro Lands in Miami after election defeatதேர்தல் தோல்விக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறிய பிரேசில் செனட்டர் ஃபிளாவியோ போல்சோனாரோ மியாமியில் தரையிறங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபிளாவியோ போல்சோனாரோ தொடர்பில் நிலவி வந்த குழப்பம்
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் நடப்பு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம்(Luiz Inácio Lula da Silva) எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ(Flávio Bolsonaro) தோல்வியடைந்துள்ளார்.

இதையடுத்து எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரேசில் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது.
முதலில் ஃபிளாவியோ போல்சோனாரோ தரைவழியாக அர்ஜென்டினாவுக்கு சென்று அங்கிருந்து தனியார் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பறந்ததாக அர்ஜென்டினா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து எல்லைகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்திய பிரேசில் அதிகாரிகள். கடந்த செவ்வாய்க்கிழமை பிரேசில் கூட்டாட்சி பொலிஸார் எல்லை சாவடிகளில் சோதனைகளை மேற்கொண்டர்.
ஆனால் ஃபிளாவியோ போல்சோனாரோ நாட்டை விட்டு வெளியேறி சென்றதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
அதைப்போல ஃபிளாவியோ போல்சோனாரோ அர்ஜென்டினாவிற்கு நுழைந்ததற்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை என்று அர்ஜென்டினா அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதனால் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்ற குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது.
மியாமியில் தரையிறங்கிய ஃபிளாவியோ போல்சோனாரோ
இந்நிலையில் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருடன் அமெரிக்காவின் மியாமியில் பாதுகாப்பாக தரையிறங்கி இருப்பதை செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சென்றுடைந்து இருப்பதன் மூலம், அவர் எங்கே இருக்கிறார் என்று கடந்த சில நாட்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

போல்சோனாரோ தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கி அவர்கள் அமெரிக்காவிற்கு நுழைய அனுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து இருந்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது.
போல்சோனாரோ மீதான பண மோசடி வழக்கில், அவரது கடவுச்சீட்டை(passport) உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போல்சோனாரோ நாட்டை விட்டு வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் லூலா டா சில்வா, ஃபிளாவியோ போல்சோனாரோ செயலை கண்டித்து இருப்பதுடன், மறைப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள், எதற்கும் பயப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.