ஆப்கானிஸ்தானில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு! பாகிஸ்தானில் ஏற்பட் நிலநடுக்கம்.. உலக செய்திகள்
பாகிஸ்தானின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்ததுடன் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பாடசாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், கையெறி குண்டு ஒன்று அந்த பாடசாலையில் வெடிக்க செய்யப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
மேலும் இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் உள்ள பாடசாலை ஒன்றில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.