ரஷ்ய விமானப்படை விமான தளத்தில் குண்டுவெடிப்பு... உக்ரைன் தாக்குதலா?: வெளியான வீடியோ
உக்ரைன் எல்லைக்கருகிலுள்ள ரஷ்ய விமானப்படை விமானதளத்தில், குண்டு ஒன்று வெடிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது Kursk என்னும் ரஷ்ய நகரம். அங்கு ரஷ்ய விமானப்படையின் விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விமான தளத்தில் குண்டு ஒன்று வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. Kursk பகுதி ஆளுநர், தாங்கள் உக்ரைனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்திய காட்சி அது என்கிறார்.
ஆனால், அது Bayraktar TB2 ரக ட்ரோன் மூலம் உக்ரைன் Kursk விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதைக் காட்டும் காட்சியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ட்விட்டரில் இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
#UPDATE: Reports of an explosion at the Kursk airbase in Russia 100km from the Ukrainian border. Governor of Kursk says a Ukrainian UAV has been shot down. Possible Bayraktar TB2 strike on the airbase given the explosion. Unconfirmed at this time however. pic.twitter.com/MchB9pwNu4
— ELINT News (@ELINTNews) June 28, 2022