அமெரிக்காவில் பயங்கர குண்டு வெடிப்பு! சிதறி கிடந்த உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு: அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் கேளிக்கை வாகனம் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறிய சம்பவம் நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tennessee மாநிலத்தில் உள்ள Nashville நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Nashville நகரின் தலைமை பொலிஸ் அதிகாரி John Drake கூறியதாவது, நகரப் பகுதியில் துப்பாக்கிச் சூடு குறித்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் ஒரு கேளிக்கை வாகனத்தை கண்டுபிடித்தனர்.
குண்ட வெடிப்பதற்கு முன்னர், 15 நிமிடங்களுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறி பதிவு செய்யப்பட்ட ஆடியோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என Drake கூறினார்.
கேளிக்கை வாகனம் வெடித்து சிதறியதில் அப்பகுதியிலிருந்து வீடுகள் சேதமடைந்தன, 3 பேர் காயமடைந்தனர் என பொலிசார் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்தப்பட்டது என தெரிவித்துள்ள அதிகாரிகள், குண்டு வெடிப்பின் போது வாகனத்தில் யாரேனும் இருந்தார்களா என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குண்டு வெடிப்பில் சிக்கியவர்களின் உடல்பாகங்களாக என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Nashville நகர மேயர் John Cooper, இச்சம்பவம் வெடிகுண்டு வெடித்தது போல் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.இத்தாக்குதலை தொடர்ந்து நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து FBI மற்றும் Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosive இணைந்து விாசரணை நடத்தி வருகின்றன.