நடிகர் அஜித் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை இஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்குகே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜூலை மாதம் இதே போல் காவல்துறை கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு மர்மநபர், அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, அஜித் வீட்டிற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக தீவர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் எந்த மர்மமான வெடிபொருளையும் கண்டுபிடிக்கவில்லை என பொலிசார் தெரிவித்தது நினைவுக்கூரத்தக்கது.