நியூசிலாந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: சோதனையின் இறுதியில் தெரியவந்த உண்மை
நியூசிலாந்து நாட்டின் முக்கிய விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
வெடிகுண்டு மிரட்டல்
நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக தெற்கில் உள்ள குயின்ஸ்டவுன் நகரம் உள்ளது.
நாட்டின் முக்கியமான சுற்றுலா தளம் என்பதால் அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குயின்ஸ்டவுன் பகுதிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
Photo / James Allan
இந்நிலையில் திடீரென குயின்ஸ்டவுன் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வழங்கப்பட்டுள்ளது.
அலறியடித்து ஓடிய மக்கள்
இதையடுத்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பான அறிவிப்புகள் ஒலிபெருக்கி மூலம் காத்திருந்த பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
எச்சரிக்கை அறிவிப்பு வெளியான உடனே விமான நிலையத்தில் இருந்து அனைத்து மக்களும் அலறியடித்துக் கொண்டு வெளியே தப்பியோடியுள்ளனர்.
Photo / James Allan
விமான நிலையம் முழுவதும் காலி செய்யப்பட்ட பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பின்னரே இது பொய்யான வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு பல மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |