ஒரே நேரத்தில் 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐரோப்பிய விமான நிலையங்களில் தீவிர சோதனை
Bomb threats to 7 flights across Europe: ஐரோப்பாவில் 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு அதில் வெடிபொருட்களோ அல்லது வேறு எந்தவொரு சந்தேகத்திற்குரிய பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பையும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த தூண்டியுள்ளன.
மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்கள்
ரோமில் தரையிறங்கிய இரண்டு விமானங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதில் டப்ளினில் தரையிறங்கிய விமானத்தை இத்தாலிய விமானப்படை விமானங்கள் இடைமறித்து பாதுகாப்பாக தரையிறக்கி தீவிர சோதனையை நடத்தினர்.
லண்டனின் ஹீத்ரோ நகரில் இருந்த புறப்பட்ட ஒரு விமானம் உட்பட போலந்து நாட்டின் வார்சா நகரில் இரண்டு விமானங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதைப்போல பல்கேரியாவின் சோபியா நகரில் தரையிறங்கிய 2 விமானங்களுக்கும் இந்த மிரட்டலானது விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிலும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

மான்செஸ்டரில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின் நாட்டின் முர்சியா நகரில் தரையிறக்கப்பட்ட விமானத்திலும் இந்த பாதுகாப்பு சோதனையானது நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் இத்தனை விமானங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவது மிகவும் அரிதானது என விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர் பால் மேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிலும் பயணிகள் விமானங்களுக்கு இப்படி ஒரு வெடிகுண்டு மிரட்டல் வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என பால் மேசன் தெரிவித்துள்ளார்.