பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்: புலம்பெயர்ந்தோர் நிலை என்ன?
பிரித்தானியாவில் விரைவில் புதிய பிரதமராக ஒருவர் பதவியேற்க உள்ள நிலையில், பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் புலம்பெயர்ந்தோர் நிலை என்ன என்னும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்
விடயம் என்னவென்றால், பிரதமர் மாறினாலும், ஆளப்போவது அதே லேபர் கட்சிதான்.
ஆக, புதிய பிரதமரின் புலம்பெயர்தல் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை.

என்றாலும், ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானியாவின் புதிய பிரதமராவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர் பிரதமரானால் புலம்பெயர்தல் தொடர்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பார் என்பது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.
அவ்வகையில், புகலிடக்கோரிக்கையாளர்கள் பெரும் செலவில் ஹொட்டல்களில் தங்கவைக்கப்படும் விடயத்தை ஆன்டி முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறார் என எக்ஸ்பிரஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதின் புலம்பெயர்தல் சீர்திருத்தங்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார் ஆன்டி.

அத்துடன், முறையான புகலிடக்கோரிக்கைகள் விடுத்தவர்கள் தவிக்கவிடப்படுவதை தவிர்த்து, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை விரைவாக நாட்டை விட்டு வெளியேற்றி, முறையான அகதிக் கோரிக்கைகளை வேகமாகவும் நியாயமான முறையிலும் பரிசீலிக்கும் அதே நேரத்தில், வலுவான எல்லைக் கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுக்கும் ஒரு புதிய கொள்கை தேவை என்றும் ஆன்டி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |