கிழிந்த துணியை வீசி எறியாமல் தைத்து மீண்டும் போட்டால் போனஸ்: பிரான்ஸ் வித்தியாசமான அறிவிப்பு
மக்கள் கிழிந்துபோன தங்கள் ஆடைகள் மற்றும் தேய்ந்து போன காலணிகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்குவதை தவிர்த்து, அவற்றை பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்தினால், அத்தகையவர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டம் ஒன்றை பிரான்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த திட்டம் எப்போது அமுலுக்கு வருகிறது?
இந்த திட்டம் அக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு பழுதுபார்ப்புக்கு 6 யூரோக்கள் முதல் 25 யூரோக்கள் வரையிலான தள்ளுபடி வடிவில் இந்த போனஸ் வழங்கப்படும்.
JEAN CHRISTOPHE VERHAEGEN/AFP
சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களில் ஒருவரான Bérangère Couillard, பிரான்சில் ஆண்டொன்றிற்கு 700,000 டன் ஆடைகள் குப்பையில் வீசி எறியப்படுவதாக தெரிவித்துள்ளார். அப்படி வீணாவதை தடுக்கவே இப்படி ஒரு வித்தியாசமான திட்டத்தை பிரான்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
அரசுக்கு அகும் செலவு
இந்த போனஸ் திட்டத்தால் அரசுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 154 மில்லியன் யூரோக்கள் செலவாகும்.
அரசாங்கத்தின் இந்த திட்டம் எல்லோருக்கும் பிடிக்கவில்லை. குறிப்பாக, வர்த்தக குழுக்களும் வலதுசாரியினரும் அரசின் இந்த திட்டத்தைக் குறைகூறியுள்ளார்கள். இது பணத்தை விரயமாக்கும் செயல் என்கிறது Republicans கட்சி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |