விஜய் விழாவில் மணமணக்கும் சைவ விருந்து! புதுச்சேரி கேட்டரிங் சர்வீஸை புக் செய்ய காரணம் என்ன?
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கிய விழாவில் சமைப்பதற்காக புதுச்சேரி கேட்டரிங் சர்வீஸை விஜய் புக் செய்துள்ளார்.
சைவ விருந்து
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.
அப்போது கடந்த முறையை போலவே இந்த முறையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கினார்.
அதன்படி விருது விழா நிகழ்ச்சியில் மொத்தம் 16 வகையான உணவுகள் மதியம் வழங்கப்பட்டன. வடை, அப்பளம், அவியல், ஸ்வீட், வெற்றிலை பாயாசம், சாதம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, பக்கோடா, மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக் குழம்பு, கதம்ப சாம்பார், ஆனியன் மணிலா, தக்காளி ரசம் ஆகியவை வழங்கப்பட்டன.
புதுச்சேரி கேட்டரிங்
இந்நிலையில் சமையல் குறித்து கேட்டரிங் உரிமையாளர் ரவி என்பவர் கூறுகையில், "நாங்கள் 45 ஆண்டுகளாக சமையல் துறையில் இருக்கிறோம்.
புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் வீட்டு திருமணத்தில் நாங்கள் தான் சமைத்தோம். அப்போது அந்த விழாவில் விஜய் எங்களது உணவை சாப்பிட்டார். பின்னர் எங்களை பற்றி கேட்டறிந்தார். அதன் பிறகு இந்த ஓர்டரை எங்களுக்கு கொடுத்தார்.
என்னுடன் சமையலுக்கு 50 பேர் உள்ளார்கள். உணவு பரிமாற 250 பேர் உள்ளனர். மொத்தமாக இந்த நிகழ்ச்சியில் 4000 பேருக்கு சமைத்தோம்.
இனி வரும் நிகழ்ச்சிகளுக்கும் எங்களுக்கே விஜய் ஓர்டர் கொடுப்பார் என்று நினைக்கிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |