பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை! ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் பேசுவார் என தகவல்
இரண்டு நாள் பயணமாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்துள்ளார்.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இரு முறை போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அந்த இருமுறையும் கொரோனா காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பிரித்தானியாவில் கொரோனா அதிகரித்ததால் அவரது மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன் இருநாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
UK PM Boris* Johnson arrives in Ahmedabad, Gujarat. He is on a 2-day India visit pic.twitter.com/yzwlX5Dppg
— ANI (@ANI) April 21, 2022
பிரித்தானியாவில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர் வந்தார். போரிஸ் ஜான்சனை குஜராத் முதல்-மந்திரி புபேந்திரபட்டேல், மாநில கவர்னர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
அகலாபாத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான விடயங்களை போரிஸ் ஜான்சன் இன்று கவனிக்கிறார். அகலாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போரிஸ் ஜான்சன் சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
அகலாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது உக்ரைன் மீதான போரில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மோடியை ஜான்சன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.