பார்ட்டிகேட் விசாரணை...மன்னிப்பு கேட்க மறுத்த போரிஸ் ஜான்சன்
பார்ட்டிகேட் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மறுத்துவிட்டார்.
பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது பிறந்தநாள் கொண்டாடியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரி மீது மெட் பொலிஸார் கடுமையான அபராதம் விதித்தனர்.
மேலும் இது தொடர்பான விசாரணையை நேற்று மெட் பொலிஸார் நிறைவு செய்துள்ள நிலையில், அதுத் தொடர்பான முழு அறிக்கையையும் அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என மெட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பார்ட்டிகேட் விசாரணை முழுமையாக நிறைவடைந்து பின்னர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொது பார்ட்டிகேட் தொடர்பாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதிலளிக்காமல் சூ கிரேயின் அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: தாக்குதலை கைவிடுங்கள்...போரின் 86வது நாளில் உக்ரைன் எடுத்த முடிவு
அத்துடன் சூ கிரே என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், மெட் பொலிஸாருக்கு மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும், இந்த விஷயத்தைப் பற்றி அடுத்த வாரம் பேசுகிறேன் எனவும் தெரிவித்தார்.