தாக்குதலை கைவிடுங்கள்...போரின் 86வது நாளில் உக்ரைன் எடுத்த முடிவு
மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி இருக்கும் உக்ரைன் ராணுவ வீரர்களை ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ராணுவ தலைமை உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் 86வ்து நாளாக நடைப்பெற்று வரும் நிலையில், மரியுபோலின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் படிப்படியாக ரஷ்ய ராணுவத்திடம் சரணடைய தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற உலக நாடுகளின் உதவியுடன் ஆலையில் பதுங்கி இருந்த பொதுமக்கள் முன்னரே வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில், தற்போது காயமடைந்த மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களை உக்ரைன் வெளியேற்றி வருகிறது.
ரஷ்ய ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்த இருக்கும் போதிலும் இரும்பு ஆலையில் இன்னும் நூற்றுக்கணக்கான உக்ரைனிய ராணுவ வீரர்கள் பதுங்கியுள்ளனர்.
இந்தநிலையில், இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்த வேண்டாம் என ஆலையில் சிக்கியுள்ள ராணுவ பிரிவை வழிநடத்தும் பட்டாலியன் தளபதி டெனிஸ் ப்ரோகோபென்கோ (Denys Prokopenko ) உத்திரவிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது ஆலையில் உயிரிழந்த ராணுவ வீரர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இத்தனை நாட்கள் ஆலையை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற முடியாமல் நின்றது உக்ரைனின் கடுமையான எதிர்ப்பை உணர்த்துவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நோட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக...ஆயுதங்களை குவித்து எல்லைகளை பலப்படுத்தும் ரஷ்யா
மேலும் உயிரிழந்த நாட்டின் ஹீரோக்களை அவர்களது குடும்பங்கள் மற்றும் உக்ரைன் மக்கள் அனைவரும் தங்கள் போராளிகளை மரியாதையுடன் அடக்கம் செய்ய முடியும் என்று நான் இப்போது நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.